முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த, ரணிலுக்கு ஜனாதிபதி செயலகம் அறிவுறுத்தல்!

0
61

முன்னாள் ஜனாதிபதிகளான ரணில் விக்ரமசிங்க மற்றும் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் பயன்படுத்தும் மேலதிக அரச வாகனங்களை மீள கையளிக்குமாறு ஜனாதிபதி செயலகம் அறிவுறுத்தியுள்ளது. 

குறித்த வாகனங்களை மீளக் கையளிக்குமாறு அவர்களுக்குப் பல சந்தர்ப்பங்களில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

எனினும் நேற்று வரை குறித்த வாகனங்கள் மீளக் கையளிக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.