7 கஞ்சா தோட்டங்கள் சுற்றிவளைப்பு! 4 துப்பாக்கிகளுடன் 8 பேர் கைது!!

0
36

அம்பாந்தோட்டை, லுணுகம்வெஹெர காட்டுப் பகுதியில் 9 ஏக்கர் நிலப்பரப்பில் 7 கஞ்சா தோட்டங்கள் பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டதோடு, 4 உள்நாட்டுத் துப்பாக்கிகளுடன் 8 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

புத்தல பொலிஸ் விசேட அதிரடிப் படை முகாமின் அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர்கள் தனமல்வெவ, சூரியவெவ பிரதேசங்களை சேர்ந்த 29 – 65 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர்.

சந்தேக நபர்களிடமிருந்து 4 உள்நாட்டுத் துப்பாக்கிகள் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டன.