வவுனியாவில் சுகவீனமடைந்த நிலையில் மீட்கப்பட்ட காட்டு யானை இன்றையதினம் உயிரிழந்ததாக வவுனியா மாவட்ட வன ஜீவராசிகள் திணைக்களத்தினர் தெரிவித்தனர்.
வவுனியா குடாகச்சக்கொடி வயல்வெளியில் சுகவீனம் காரணமாக வீழ்ந்து கிடந்த யானை, வன ஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர்களால் மீட்கப்பட்டு கடந்த ஐந்து நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையிலேயே இன்றையதினம் உயிரிழந்தது.
இதேவேளை, குறித்த யானையின் மரணம் தொடர்பான உடற்கூற்று பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.