தம்பலகாமம் பிரதேச செயலாளர் பிரிவு உட்பட்ட வர்ணமேடு, முள்ளியடி, சிப்பி திடல் முதலான பகுதிகளில் விதைக்கப்பட்ட நெல் அண்மையில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தால் அழிவடைந்து விட்டது என விவசாயிகள் தெரிவித்தனர்.
இப்பிரதேசத்தில் சுமார் 1350 ஏக்கருக்கும் மேற்பட்ட வயல்களில் வேளாண்மை மேற்கொள்ளப்பட்டது.
வெள்ளப் பெருக்கு காரணமாக பெரும்பான்மையான வயல்கள் அழிந்து விட்டதாகவும் அப்பகுதிகளில் மீள விதைப்பு மேற்கொண்டு வருவதாக விவசாயிகள் கூறினர்.
இதனால் தமக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
வெள்ளப்பெருக்கினால் வேளாண்மை யாவும் அழிந்ததனால் மீண்டும் நாங்கள் விதைத்துள்ளோம். அரசாங்கம் தான் எங்களுக்கு உதவி செய்ய வேண்டும்.
இதுதான் எங்களுடைய பரம்பரை தொழில். அரசாங்கம் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். எங்களுக்கு வேறு தொழில் இல்லை.
முதல் தடவை விதைப்பு செய்த நெல் அழிந்துவிட்டது. இரண்டாம் தடவை செய்கின்றோம். மீண்டும் மழை வரும் என்று சொல்கின்றார்கள். என்ன நடக்கும் என்று எங்களுக்குத் தெரியவில்லை என விவசாயிகள் மேலும் தெரிவித்தனர்.