இலங்கைக்கு வெளிநாட்டு பண அனுப்பல்கள் 10.1 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
2024 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதத்தில் புலம்பெயர் தொழிலாளர்களிடமிருந்து இலங்கைக்கு மொத்தம் 613.8 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வெளிநாட்டுப் பணம் அனுப்பப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
இதன்படி, 2024 ஆம் ஆண்டிற்கான வெளிநாட்டு பணவனுப்பல்கள் 10.1 சதவீதத்தால் அதிகரித்தது.
வெளிநாட்டுப் பணவனுப்பல்களின் மொத்த மதிப்பு 6 ஆயிரத்து 575.4 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 10.1 சதவீத அதிகரிப்பாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.