அம்பாறை கல்முனை தமிழர் கலாசார பேரவையின் முக்கியஸ்தர்களுக்கு எதிராக, கிட்டங்கி வீதியில், திருவள்ளுவரின் திருவுருவச் சிலையினைத் திறப்பதற்கு நீதிமன்றத்தால் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், பொதுமக்கள் இணைந்து திருவள்ளுவரின் திருவுருவச் சிலையினை நேற்று திறந்து வைத்தனர்.
திருவள்ளுவரின் சிலையினைத் திறப்பதால் இன முறுகல் ஏற்படும் என கோரி, கல்முனை தமிழர் கலாசார பேரவையின் முக்கியஸ்தர்களுக்கு எதிராக தடையுத்தரவொன்று பொலிஸாரால் கல்முனை நீதிமன்றில் பெற்றுகொள்ளப்பட்டது.
தடையுத்தரவு பெற்றுக்கொள்ளப்பட்ட நபர்கள் நிகழ்வில் பங்குபற்றாத நிலையில், பொதுமக்களின் ஒத்துழைப்புடன், சிலை திரைநீக்கம் செய்து வைக்கப்பட்டது.
மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் மேலாளர் சுவாமி நீலமாதவானந்தா ஜீ, கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ரி.ஜே அதிசயராஜ், கல்முனை தமிழர் கலாசார அபிவிருத்தி பேரவை உறுப்பினர்கள் உட்பட கல்முனை பிராந்திய இளைஞர் அமைப்புகள்,
பொதுமக்கள் என பலரும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.