இந்த மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 44,293 சுற்றுலாப்பயணிகள் நாட்டுக்கு பிரவேசித்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.குறித்த காலப்பகுதியில் இந்தியாவிலிருந்து 5,823 சுற்றுலாப்பயணிகளும், ரஸ்யாவில் இருந்து 5,795 சுற்றுலாப்பயணிகளும், பிரித்தானியாவில் இருந்து 4,710 சுற்றுலாப்பயணிகளும் நாட்டுக்கு பிரவேசித்துள்ளனர்.
இதன்படி, இந்த வருடத்தின் கடந்த ஐந்தாம் திகதி வரையான காலப்பகுதிக்குள் இரண்டு இலட்சத்து 97,054 சுற்றுலாப்பயணிகள் நாட்டுக்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.