வைபவரீதியாக ஆரம்பமான புதிய சுற்றுலா தொடருந்து சேவை!

0
9

நானுஓயா மற்றும் பதுளை தொடருந்து நிலையங்களுக்கு இடையிலான எல்ல ஒடிஸி நானுஓயா என்ற புதிய சுற்றுலா தொடருந்து சேவை இன்றைய தினம் வைபவரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. நானுஓயா தொடருந்து நிலையத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் கலந்துகொண்டு தொடருந்து பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர குறித்த தொடருந்து சேவையை ஆரம்பித்து வைத்துள்ளார்.

இந்த தொடருந்து செவ்வாய் கிழமைகளை தவிர ஒவ்வொரு வார நாட்களிலும் 14 பெட்டிகளுடன் இயக்கப்படும் என தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த தினங்களில் காலை 8:15 க்கு நானுஓயாவிலிருந்து பதுளைக்கும் பிற்பகல் ஒரு மணிக்கு பதுளையிலிருந்து நானுஓயாவுக்கு இந்த தொடருந்து சேவை இடம்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.