யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி கோயிலின் தென்திசை நுழைவாயில் இன்று நண்பகல் திறந்து வைக்கப்பட்டது.நல்லூர் கந்தசுவாமி கோயிலின் தென்திசையில் நல்லூர் கைலாச பிள்ளையார் கோயிலுக்கு அண்மையாக அமைக்கப்பட்ட நல்லூரான் தெற்கு வாசல் நுழைவாயில் தைப்பூசமாகிய இன்றையதினம் நண்பகல் 12 மணியளவில் திறந்து வைக்கப்பட்டது.
பாரம்பரிய முறைப்படி கைலாச பிள்ளையார் கோயிலில் இருந்து நல்லூரானுக்கு மக்களால் காணிக்கையாக வழங்கப்பட்ட நெல்லினை மாண்டுவண்டிலில் ஏற்றி நல்லூர் தென்திசை நுழைவாயில் ஊடாக ஆலயத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டது.நிகழ்வில் சாதனைத் தமிழன் கலாநிதி ஆறுதிருமுருகன், முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், யாழ் மாநகரசபை முன்னாள் ஆணையாளர் த.ஜெயசீலன், யாழ் மாநகரசபை முன்னாள் உறுப்பினர் வ.பார்த்தீபன் மற்றும் நல்லூர் கந்தன் பக்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
யாழ்ப்பாணத்து கந்தபுராண கலாசாரத்தை எடுத்தியம்பும் வகையில் நல்லூரான் தெற்கு வாசல் வளைவு அமைக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.