மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவில், காட்டு யானை தாக்கியதில் விவசாயி உயிரிழந்துள்ளார்

0
9

மட்டக்களப்பு – கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள கொம்பர்சேனை வயற்பிரதேசத்தில் காட்டு யானை தாக்கியதில் விவசாயி ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். வேப்பவெட்டுவான் பாலர்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த எட்டு பிள்ளைகளின் தந்தையான 62 வயதுடைய சின்னத்தம்பி கந்தசாமி என்பவரே உயிரிழந்தவராவர்.

வயல் வாடியில் தனியாக உறங்கிக்கொண்டிருந்தவேளை, அதிகாலையில் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாகக் கூறப்படுகின்றது. திடீர் மரணவிசாரணையதிகாரி எம்.எஸ்.எம்.நசிர் கரடியனாறு பொலிஸ் அதிகாரியுடன் சம்பவ இடத்திற்கு நேரடியாகச் சென்று விசாரணைகளை முன்னெடுத்தார்.

சடலம் பிரேத பரிசோனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
மரணமடைந்தவர் வளர்த்த இரண்டு நாய்கள் சம்பவ இடத்தில் மிகவும் சோகத்துடன் காணப்பட்டமை, அங்கிருந்தவர்களை கவலையுற வைத்தது.