கிழக்கு மாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக வர்ண ஜெயசுந்தர கடமைகளைப் பொறுப்பேற்றார்

0
21

கிழக்கு மாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்ட வர்ண ஜெயசுந்தர தனது கடமைகளை இன்றைய தினம்
சுபவேளையில் பொறுப்பேற்றுக்கொண்டார். புதிய சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கு விசேட அணிவகுப்பு மரியாதையும் அளிக்கப்பட்டது.

அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட கிழக்கு மாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கு, அவரது ஆளுகைக்குட்பட்ட மாவட்டங்களுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர்கள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.
மாவட்டங்களுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர்களால், பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டனர்.

காலை 9.22 க்கு கடமை பதிவேட்டில் ஒப்பமிட்டு தனது கடமைகளை சுபவேளையில் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ஜெயசுந்தர
பொறுப்பேற்றுக் கொண்டார். இவரது நிர்வாகத்தின் கீழ் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மற்றும் கந்தளாய் பொலிஸ் அதியட்சகர் பிரிவுகள் உள்ளடங்குகின்றன.

மாவட்டங்களுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர்கள், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள், உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள் மற்றும் பொலீஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் பலரும் கடமையேற்பு நிகழ்வில் கலந்துகொண்டனர்.
கிழக்கு மாகாணத்துக்கு பொறுப்பாக கடமையாற்றிய சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோகண, வடமேல் மாகாணத்துக்கான சிரேஷ்ட பிரதி பொலீஸ் மா அதிபராக கடமை ஏற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.