18 மில்லியன் ரூபாய் பெறுமதியான போதைப்பொருளுடன் இந்திய பிரஜை கைது!

0
22

சுமார் 18 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள ‘குஷ்’ போதைப்பொருளை நாட்டிற்குக் கொண்டு வந்த இந்திய பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். 

விமான நிலைய காவல்துறை மற்றும் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் குழுவால் நேற்று கைது செய்யப்பட்ட இந்த நபர் தமிழ்நாட்டைச் சேர்ந்த 38 வயது பேருந்து சாரதி என்று தெரிவிக்கப்படுகிறது.

அவர் எடுத்துச் சென்ற இரண்டு பெட்டிகளில் ஊக்கமருந்துகளும் ,”குஷ்” என்ற போதைப்பொருளும் கண்டுபிடிக்கப்பட்டது.

அதன் எடை 1.5 கிலோகிராம் ஆகும்.