பாணின் விலையை குறைக்காமல் விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக முறைப்பாடு!

0
7

யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள வெதுப்பகங்கள் பாணின் விலையை 10 ரூபாயால் குறைக்காமல் விற்பனை செய்யும் பட்சத்தில் அது தொடர்பான முறைப்பாடுகளை பொதுமக்கள் நுகர்வோர் விவகார அதிகாரசபையிடம் தெரிவிக்கலாம் என யாழ்ப்பாண மாவட்ட வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.

பாணின் விலையை 10 ரூபாயால் குறைப்பதற்கு அண்மையில் தீர்மானிக்கப்பட்டது.

அதற்கமைய யாழ் மாவட்டத்திலும் அதனை நடைமுறைப்படுத்துமாறு யாழ்ப்பாண மாவட்ட வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் அறிவித்திருந்தது.

எனவே பாணின் விலையை 10 ரூபாயால் குறைக்காமல் விற்பனை செய்யும் பட்சத்தில் அது தொடர்பான முறைப்பாடுகளைப் பொதுமக்கள் நுகர்வோர் விவகார அதிகாரசபையிடம் தெரிவிக்கலாம் என தற்போது கூறப்பட்டுள்ளது.