ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன தொடர்பில் நேற்றைய தினம் பிரதி அமைச்சர் நளின் ஹேவகே நாடாளுமன்றில் தெரிவித்த கருத்துக்குத் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி கௌசல்யா ஆரியரத்ன கண்டனம் தெரிவித்துள்ளார் தமது பேஸ்புக் கணக்கில் பதிவொன்றை இட்டு அவர் இந்த கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.
குறித்த சம்பவத்தின்போது, தான் சபையில் இல்லாவிட்டாலும், பெண்ணியக் கொள்கைகளுக்காக முன்னிற்கும் ஒரு பெண்ணாக, எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர் நாடாளுமன்றத்தில் பொருத்தமற்ற அறிக்கையை வெளியிட்டமையை ஏற்றுக்கொள்ள முடியாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாத்தளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரோகிணி கவிரத்ன தமது பெயரை மாற்றியுள்ளதாகக் குறிப்பிட்டு பிரதி அமைச்சர் நளின் ஹேவகே நேற்று நாடாளுமன்றில் சில கருத்துகளை முன்வைத்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா, உடனடியாக அந்த கருத்தை மீளப்பெறுமாறு கோரியிருந்தார்.