நாட்டில் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை – ஜனாதிபதி

0
7

நாட்டில் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இல்லை என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

இன்று (23) கண்டி ஸ்ரீ தலதா மாளிகையை வழிபடுவதற்காக வருகை தந்த போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
நாட்டில் பாதாள உலக குழுக்களுக்களுக்கிடையில் மோதல் ஆரம்பித்துள்ளது.

இது நாட்டு மக்களின் பாதுகாப்புக்கு எவ்விதமான பாதிப்பையும் ஏற்படுத்தாது எனக் குறிப்பிட்டார்.

அத்தோடு, பாதாள உலக குழுவை முற்றாக அழிப்பதற்கான முயற்சிகள் மேற்கொண்டு வருவதாகவும் , தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தால் அதை செய்து முடிக்க முடியுமென நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

கடந்த நாட்களில் அரசியல் பாதுகாப்பை கொண்டு இந்த குழு வளர்ந்துள்ளது.

தற்போது அவ்வாறான பாதுகாப்பு அவர்களுக்கு கிடைப்பதில்லை என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.