சுன்னாகம் பாரம்பரிய றோட்டறி கழகத்தின் மின் இதழ் வெளியீடு

0
43

சுன்னாகம் பாரம்பரிய றோட்டறி கழகத்தின் உத்தியோகபூர்வ அரையாண்டு மின் இதழ் வெளியிடப்பட்டுள்ளது.கடந்த ஆறு மாதங்களில் கழகம் மேற்கொண்ட சேவை முயற்சிகளை எடுத்துக்காட்டும் வகையில் குறித்த மின் இதழ் வெளியிடப்பட்டுள்ளது.இந்த தளம் சமூகத்தை மிகவும் திறம்பட இணைக்கவும், ஈடுபடவும் மற்றும் சேவை செய்யவும் உதவும் என கழகத்தினர் தெரிவித்துள்ளனர்.

இதன்போது கலந்து கொண்ட றோட்டறி மாவட்ட உதவி ஆளுநர் றொட்டேறியன் போல் ஹரிஸ் பெலோ ரகுராம் கலந்து கொண்டு றோட்டறியின் நான்கு வழித் தேர்வு பற்றிய விடயங்களைப் பகிர்ந்து கொண்டார்.
உண்மை, நியாயம், நல்லெண்ணம் மற்றும் அனைவருக்கும் நன்மை ஆகியவை நமது செயல்களை எவ்வாறு வழிநடத்த வேண்டும் என்பதை குறிக்கும் வகையில் றோட்டறி உதவி ஆளுநர் கருத்துக்களை முன்வைத்தார்.
இந்நிகழ்வில் றோட்டறி கழக உறுப்பினர்கள் பங்கேற்றனர்.