புனித ரமழான் மாதம் இன்று ஆரம்பம்

0
29

புனித ரமழான் மாதம் இன்று ஆரம்பமாகின்றது. 

ரமழான் மாதத்துக்கான தலைப்பிறை பார்க்கும் மாநாடு நேற்று கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நடைபெற்றது 

எனினும் புனித ரமழான் மாதத்துக்கான தலைப்பிறை நேற்று தென்படவில்லை என கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.

இதன்படி, இன்று மஹ்ரிப் தொழுகையுடன் புனித ரமழான் மாதம் ஆரம்பமாகிறது. 

நாளை காலை முதல் இலங்கை வாழ் முஸ்லிம் மக்கள் புனித ரமழான் மாதத்துக்கான நோன்பை நோற்பார்கள் என கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.