உலக காட்டுயிர் தினம் இன்று!

0
17

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் 3-ஆம் நாள் world wildlife day – உலக காட்டுயிர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.இது காட்டுயிர்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்தவும், அவற்றைப் பாதுகாக்க வேண்டிய அவசியத்தை மக்களுக்கு உணர்த்தவும் ஐக்கிய நாடுகள் சபையால் (united natios) 2013 ஆம் ஆண்டு காட்டுயிர்கள் தினம் அறிவிக்கப்பட்டது.

முக்கிய நோக்கங்கள்:
காட்டுயிர் வாழ்விடங்களைப் பாதுகாத்தல். அழியும் நிலையில் உள்ள உயிரினங்களைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துதல். சட்டவிரோத வேட்டையாடுதல் மற்றும் காட்டுயிர் வர்த்தகத்தைத் தடுத்தல். நிலையான வளர்ச்சியை ஊக்குவித்தல்.

இந்த நாளில், உலகெங்கிலும் பல்வேறு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள், மற்றும் பிரச்சாரங்கள் நடைபெறுகின்றன. குறிப்பாக பாடசாலைகளில் மாணவர்களுக்கு காட்டுயிர்களைப் பற்றிய கல்வி நிகழ்ச்சிகளும், சமூக ஊடகங்களில் world wild life day என்ற பெயரில் விழிப்புணர்வு பதிவுகளும் பகிரப்படுகின்றன.