யால தேசிய பூங்கா இன்று முதல் மீண்டும் திறப்பு

0
8

தற்காலிகமாக மூடப்பட்டிருந்த யால தேசிய பூங்காவிலுள்ள பல பாதைகள் இன்று புதன்கிழமை (05) முதல் மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாக பெய்த பலத்த மழையினால் யால தேசிய பூங்காவின் பல பாதைகள் நீரில் மூழ்கியது. வனவிலங்குகளின் பாதுகாப்பு மற்றும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு, முதலாம் திகதி முதல் மறு அறிவித்தல் வரை மூடுவதற்குத் தீர்மானித்தது.

மழை காரணமாக கடந்து செல்ல முடியாத பாதைகள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும்.

யால தேசிய பூங்கா பகுதியில் இன்றையதினம்  காலை பெய்யும் மழையைப் பொறுத்து இந்த நிலைமை மாறக்கூடும் என்று வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.