உரிய நகர முகாமைத்துவம் ஊடாக இலங்கையைக் கவர்ச்சிகரமான சுற்றுலா களமாக மாற்ற முடியும்-ஜனாதிபதி

0
10

சம்பிரதாய கட்டுமானங்களுக்கு அப்பாலான சரியான நகரத் திட்டமிடல் முறையின் மூலம் இலங்கையைக் கவர்ச்சிகரமான சுற்றுலா களமாக மாற்ற முடியுமென ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
தேசிய பௌதீக திட்டமிடல் திணைக்களத்தின் அதிகாரிகளுடன் இன்று (05) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பிலேயே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இதனைத் தெரிவித்தார்.

நகர அபிவிருத்தியைத் திட்டமிடும்போது இலங்கையின் தனித்துவத்தைப் பிரதிபலிக்கும் வகையில் திட்டங்களைத் தயாரிக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

நகரங்கள் மாத்திரமின்றி கிராம அபிவிருத்தியை மையப்படுத்தி நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான அரசாங்கத்தின் வேலைத்திட்டம் தொடர்பில் இங்கு நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றதுடன்இ அந்த அபிவிருத்தி செயற்பாடுகளின் போது கிராமிய கலாசாரம் மற்றும் மக்கள் வாழ்வியலின் தனித்துவத்தைப் பாதுகாக்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார்.