2024 கல்விப் பொதுத்தராதர சாதாரண தரபரீட்சையை இலக்காக கொண்ட அனைத்து கற்றல் செயற்பாடுகளும் எதிர்வரும் 11 ஆம் திகதி நள்ளிரவு முதல் தடை விதிக்கப்படவுள்ளன.பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, 2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான பிரத்தியேக வகுப்புகள், கருத்தரங்குகள், செயலமர்வுகள் மற்றும் பயிற்சி பட்டறை என்பவற்றிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கல்விப் பொதுத்தராதர சாதாரணத் தர ப்பரீட்சை எதிர்வரும் 17 ஆரம்பமாகவுள்ளது.