பாதுக்கை, போரேகெதர பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
இந்த விபத்து சனிக்கிழமை காலை 07.40 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேருந்து மற்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் மோட்டார் சைக்கிளின் செலுத்துனர் படுகாயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.