கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான அனைத்து பயிற்சி வகுப்புகள், கருத்தரங்குகள், செயலமர்வுகள், மற்றும் சமூக ஊடகங்கள் வழியாக ஆதரவு வழங்குகின்றமை ஆகியவை எதிர்வரும் 11 ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவடையும்.
எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் இதுபோன்ற அனைத்து நடவடிக்கைகளும் தடைசெய்யப்படும் எனப் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் 17 ஆம் திகதி ஆரம்பமாக உள்ளது.
2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் 26 ஆம் திகதி நிறைவடைய உள்ளது