மலையக மார்க்கத்திலான தொடருந்து சேவைகள் இன்று (10) காலை 8.30 அளவில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.பதுளையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த தொடருந்து ஒன்று நாவலப்பிட்டி மற்றும் உலப்பனை தொடருந்து நிலையங்களுக்கு இடையில் நேற்று (09) தடம் புரண்டதால் மலையக மார்க்கத்திலான தொடருந்து சேவைகள் இடைநிறுத்தப்பட்டிருந்தன.
இந்த சம்பவத்தால் இரவு நேர அஞ்சல் தொடருந்துகள் கம்பளை மற்றும் நாவலப்பிட்டியில் இடைநிறுத்தப்பட்டன. இந்த நிலையில் இன்று காலை மலையக மார்க்கத்திலான தொடருந்து சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டன.