யாழ் போதனா வைத்தியசாலை வைத்தியர்களும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.அவசர சிகிச்சைகள் தவிர்ந்த ஏனைய சேவைகள் பெரும்பாலும் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் வைத்தியர் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே குறித்த அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் முன்னெடுத்துள்ளது.
இதற்கு வலுசேர்க்கும் முகமாக யாழ் போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர்களும் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.