சிறப்பு இப்தார் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜனாதிபதி!

0
6

முஸ்லிம்களின் புனித ரமழான் நோன்பு மாதத்தையொட்டி நடைபெற்ற இப்தார் நிகழ்ச்சி , ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் பங்கேற்புடன் நேற்று (14) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியானது அலரி மாளிகையில் நடைபெற்றது.

இஸ்லாமிய மதத் தலைவர்களும் ஏராளமான முஸ்லிம்களும் இதில் கலந்து கொண்டதுடன், மேலும் இஸ்லாமிய சமய நிகழ்வுகளுக்கு முன்னுரிமை அளித்து இந்த நிகழ்வு நடைபெற்றது. சிறப்பு பிரார்த்தனைக்குப் பிறகு, மாலை 6.23க்கு நோன்பு துறக்கப்பட்டது.