2036ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடத்த இந்தியா தீவிரம்!

0
6

நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் உலகின் முக்கியத்துவம் வாய்ந்த விளையாட்டுப் போட்டியான ஒலிம்பிக் போட்டியானது, 2028ஆம் ஆண்டு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலும், 2032ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரிலும் நடைபெறவுள்ள நிலையில், 2036ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடத்த இந்தியா முன்முறமாக முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. 

குஜராத் மாநிலம் காந்தி நகரில் இலங்கை மதிப்பில் ஆயிரம் கோடி மதிப்பில், பரா ஒலிம்பிக் போட்டிகளுக்கான, பயிற்சி மையத்திற்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா காணொலி வாயிலாக கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்திற்கு அடுத்துள்ள சர்தார் படேல் விளையாட்டு வளாகத்தில் 10 பெரிய மைதானங்கள் கட்டப்படும். 

முன்னதாக, தனது அமெரிக்கா பயணத்தின் போது இந்திய பிரதமர் மோடி, 2036ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கான சாத்தியமான முயற்சிகளை இந்தியா மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார். 

2036ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக்ஸ் போட்டியை, இந்தியாவின் குஜராத் மாநில அகமதாபாத்தில் நடத்த, இந்திய அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. இந்தியாவில் ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் வாய்ப்பை பெற்றால் இந்தியாவில் நடைபெறும் முதல் ஒலிம்பிக் தொடராக அது அமையும்.