மாத்தறை நீதிமன்றத்தில் முன்னிலையானார் தேசபந்து!

0
21

காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

2023ஆம் ஆண்டு மாத்தறை பெலேன பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் அவர் உள்ளிட்ட 8 பேரை கைது செய்யுமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்தநிலையில் அவர் பல வாரங்களாக தலைமறைவாகியிருந்த நிலையில் சற்றுமுன்னர் மாத்தறை நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.