தொண்டைமானாறு சந்நிதியான் ஆச்சிரம வாராந்த ஆன்மீக அருளுரை!

0
14

யாழ்ப்பாணம், வடமராட்சி – தொண்டைமனாறு சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் வாராந்தம் இடம்பெறும் நிகழ்வில் நேற்று மகாபாரதம் தொடர் சொற்பொழிவு இடம்பெற்றது.

சொல்லின் செல்வர் இரா.செல்வவடிவேலால் சொற்பொழிவு நிகழ்த்தப்பட்டது.

தொடர்ந்து உதவித் திட்டங்கள் வழங்கப்பட்டன.

அந்த வகையில் யாழ்ப்பாணம் விழிப்புலனற்றோர் சங்கத்தின் கோரிக்கைக்கு அமைவாக, பார்வையற்ற இரண்டு குடும்பங்களின் வீடுகளுக்கு புதிய மின் இணைப்பை பெற்றுக் கொள்வதற்க்காக 1 இலட்சத்து 30 ஆயிரம் ரூபா நிதி யாழ் விழிப்புலன்ற்றோர் சங்கத்திரனரிடம் வழங்கப்பட்டது.

மேலும் குப்பிழானைச் சேர்ந்த குடும்பம் ஒன்றிற்கு விவசாய தேவைக்காக 70 ஆயிரம் ரூபா பெறுமதியான நீர் இறைக்கும் இயந்திரம் வழங்கப்பட்டது.

சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி சாதனைத்தமிழன் மோகனதாஸ் சுவாமிகள் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டு பேரவை நிர்வாகிகள், உறுப்பினர்கள், சந்நநிதியான் ஆச்சிரம தொண்டர்கள், அடியவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.