எதிர்வரும் சில நாட்களுக்கு வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்!

0
30

நாளை முதல் எதிர்வரும் சில நாட்களுக்குஇ மாலை வேளைகளில் நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாதகமான வளிமண்டல நிலைமைகள் உருவாகி வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய நாட்டின் பல பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மத்திய, சப்ரகமுவ, மேல், தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும், குருநாகல், பொலன்னறுவை மாவட்டங்களிலும் சில இடங்களில், 75 மில்லிமீற்றருக்கு மேல் ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடிய வாய்ப்புள்ளதாகவும் அந்த திணைக்களம் அறிவித்துள்ளது.