பிணை நிபந்தனைகளைப் பூர்த்தி செய்த வியாழேந்திரன் விளக்கமறியலில் இருந்து வெளியேறியுள்ளார்.
இவரை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்ற நீதிபதி தனுஜா லக்மாலி பிணையில் விடுவிக்குமாறு நேற்றைய தினம் உத்தரவிட்டிருந்தார். எனினும் பிணை நிபந்தனைகளை முறையாக பூர்த்தி செய்யாமையின் காரணமாக அவர் மீண்டும் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டார்.
கையூட்டல் பெறுவதற்கு உதவி செய்த குற்றச்சாட்டில் இவர் அண்மையில் கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். இந்தநிலையில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே சதாசிவம் வியாழேந்திரனை பிணையில் விடுவிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.