புதிய கணக்காய்வாளர் நாயகம் தெரிவு 22 ஆம் திகதி

0
8

கணக்காய்வாளர் நாயகம் பதவிக்குத் தகுதியான நபரை நியமிப்பதற்காக அரசியலமைப்புச் சபை எதிர்வரும் 22ஆம் திகதி ஒன்றுகூடவுள்ளது. இந்த பதவிக்கான தகுதியான ஒருவரின் பெயர் ஜனாதிபதியால் எதிர்வரும் சில நாட்களில் சபாநாயகரிடம் சமர்ப்பிக்கப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கணக்காய்வாளர் நாயகம் பதவியிலிருந்த டபிள்யூ. பி. சி. விக்ரமரத்ன, கடந்த 8ஆம் திகதி ஓய்வுபெற்றார்.

தேசிய கணக்காய்வு அலுவலகத்தில் சிரேஷ்ட அதிகாரிகள் இருவர் உள்ள நிலையில், அவர்களில் ஒருவரை இந்த உயர் பதவிக்கு நியமிக்க வாய்ப்பு உள்ளதாக அறியப்படுகிறது. இந்த கணக்காய்வாளர் நாயகம் பதவி, இலங்கை அரச சேவையின் மிக முக்கியமான மற்றும் உயரிய பதவிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.