சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவனின் மரணம் தொடர்பில் ஐந்து பேரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் அதே பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 16 மாணவர்கள் இன்று வாக்குமூலம் வழங்கவுள்ளனர். இதேவேளை உயிரிழந்த சரித் டில்சான் என்ற மாணவனின் மரணத்துக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என அகில இலங்கை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் அதிகாரிகள் ஆழமான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும், பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு வலியுறுத்தியுள்ளது. மாணவனின் மரணம் தொடர்பில் சமனலவெவ மற்றும் புஸ்ஸல்லாவை காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.