கிளிநொச்சியில் கோர விபத்து! – தந்தை, இரு மகன்கள் உயிரிழப்பு!!

0
529

கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இத்தாவில் பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் மூவர் உயிரிழந்தனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சி நோக்கி கார் காணப்படுவதாவும் அதற்கு நேரெதிரே டிப்பர் காணப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த நிலையில், வீதியைவிட்டு விலகிய ரிப்பர் காருடன் மோதி விபத்து இடம் பெற்றிருக்கலாம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த விபத்தில் 9 மற்றும் 12 வயதுடைய சிறுவர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

அதேநேரம், சம்பவத்தில் படுகாயமடைந்த சிறுவர்களின் தந்தை பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர், மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்ட நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

இந்தச் சம்பவத்தில் பளை தர்மங்கேணி பகுதியைச் சேர்ந்த சற்குணம் சாருஜன், சற்குணம் சாரங்கன் என்ற இரு சிறுவர்களே உயிரிழந்தனர்.

உயிரிழந்த சிறுவர்களின் சடலங்கள் பளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.
இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.