பொரளை துப்பாக்கிச் சூடு : உயிரிழப்பு 2 ஆக அதிகரிப்பு!

0
7

பொரளை, சஹஸ்புர சிறிசர வீட்டுத் தொகுதிக்கு அருகில் நேற்று வியாழக்கிழமை (07) இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன் மூலம் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டாக உயர்ந்துள்ளது. இன்று வெள்ளிக்கிழமை (08) காலை ஒருவர் உயிரிழந்த நிலையிலேயே மற்றையவரும் உயிரிழந்துள்ளார்.

பொரளை, சஹஸ்புர சிறிசர அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்திற்கு அருகில் நேற்றையதினம் இரவு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

இரவு 8:40 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்களால் இளைஞர்கள் குழுவை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

T-56 துப்பாக்கியைப் பயன்படுத்தி துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு சந்தேக நபர்கள்  மோட்டார் சைக்கிளில் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.