யாழில் கொரோனாவால் 8ஆவது மரணம் பதிவு

0
174

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த வயோதிபப் பெண்ணொருவர் கொரோனா தொற்று நோயால் உயிரிழந்தார்.

சிறுநீரக செயலிழப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்த கோண்டாவிலைச் சேர்ந்த 79 வயது பெண்ணே இவ்வாறு உயிரிழந்தார்.

இதன்மூலம் யாழ்ப்பாணத்தில் 8 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்தனர்.