முல்லைத்தீவு குமுழமுனை தண்ணிமுறிப்பு 03 கண்டம் வயல்வெளிப்பகுதியில் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்ட விவசாயிகள் மூவர் மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்தனர்.
நேற்று (15)மாலை வேளை தண்ணிமுறிப்பு உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய மழைபெய்தது.
குமுழமுனை பகுதியைச் சேர்ந்த இரு விவசாயிகளும், கேப்பாபிலவு பகுதியைச் சேர்ந்த ஒரு விவசாயியும் குறித்த பகுதியில் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த வேளை மின்னல் தாக்குதலுக்கு இலக்காகினர்.
இரவாகியும் இவர்கள் விடு திரும்பாத நிலையில் இவர்களை தேடி உறவினர்கள் விவசாயிகள் சென்றவேளை வயல்நிலத்தில் உயிரிழந்த நிலையில் குறித்த 3 விவசாயிகளும் காணப்பட்டனர்.
இச்சம்பவம் தொடர்பில் நேற்று இரவு 10.00 மணியளவில் முல்லைத்தீவு பொலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு முல்லைத்தீவு பொஸிஸார் சென்று விசாரணைகளை மேற்கொண்டனர்.
உயிரிழந்த இருவர் ஒரே குடும்பத்தை சேர்ந்த இரட்டை சகோதரிகளை திருமணம் செய்து வாழ்ந்து வந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.