இந்நிலையில் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனின் முன்மொழிவுக்கு அமைய ஏறாவூர்ப் பற்று கரடியனாறு பகுதியில் அமைக்கப்படவுள்ள கொரோனா நோயாளிகளுக்கான அனைத்து வசதிகளுடன் கூடிய தற்காலிக வைத்தியசாலையை அமைப்பதற்கான வேலைத்திட்டம் தொடர்பான கலந்துரையாடலொன்று இன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தலைமையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் 100 அடி நீளமும் 40 அடி அகலமும் கொண்ட தற்காலிக வைத்தியசாலையை அமைப்பதற்கான முன்னாயத்தங்கள் தொடர்பாகவும், மின்சார வசதிகள், குடிநீர் வசதிகள் மற்றும் மலசல கூட வசதிகள் உள்ளிட்ட மேலும் பல தேவைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
இதன்போது அரசாங்க அதிபர் கே.கருணாகரன்,மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன், கட்சி முக்கியஸ்தர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் திணைக்கள அதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.