மட்டு. இருதயபுரம் பகுதியில் 51 நபர்களுக்கான பி.சி.ஆர் பரிசோதனை

0
256

வெளி மாவட்டங்களில் இருந்து மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவுக்குட்பட்ட இருதயபுரம் பொதுசுகாதார பிரிவு பதிகளுக்குள் வருகை தந்துள்ளவர்கள் வைரஸ் நோய் தொற்றுக்குள்ளானவர்களுடன் நேரடியாக தொடர்பு பட்டவர்கள் மற்றும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான பி.சி.ஆர் பரிசோதனைகள் இன்று முன்னெடுக்கப்பட்டன.

மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக வைத்தியர் கிரிசுதன் வழிகாட்டலின் கீழ் மாமாங்கம் மற்றும் இருதயபுரம் பொது சுகாதார பரிசோதகர்களினால் 51 நபர்களுக்கான பி சி ஆர் பரிசோதனைகள் இன்று முன்னெடுக்கப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தீவிரமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பி.சி.ஆர் மற்றும் ரபிட் அன்டிஜன் மூலமான பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.