கொவிட் தடுப்பூசி பெற்றுக் கொண்டவர்களுக்கான அறிவிப்பு

0
515

கொவிட் 19 தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் இரண்டாவது டோஸ் தடுப்பூசியை பெற்றுக் கொடுப்பதற்கு தேயைான அஸ்ட்ரா செனகா தடுப்பூசி தொகையை விரையில் நாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுத்துள்ளதாக அரச மருந்தக கூட்டுத்தாபன தலைவர் விசேட வைத்திய நிபுணர் பிரசன்ன குணசேன தெரிவித்தார்.

இது தொடர்பாக சில நாடுகளுடன் தற்போதைய நிலையில் கலந்துரையாடியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இலங்கையில் சுமார் 6 இலட்சம் அஸ்ட்ரா செனகா தடுப்பூசிகள் இரண்டாவது டோஸ் வழங்குவதற்காக தேவைப்படுகிறது.

குறித்த தடுப்பூசி தொகையை விரைவில் பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் இதன்போது தெரிவித்தார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு விசேட வைத்திய நிபுணர் இதனை தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர், தடுப்பூசியை பெற்றுக் கொண்ட பின்னர் வைரஸுக்கு எதிராக போராடும் திறன் உடலில் ஏற்பட சில காலம் தேவைப்படுவதால் தற்போது நடைமுறையில் உள்ள சுகாதார வழிகாட்டுதல்களை அவ்வாறே கடைப்பிடிப்பது கட்டாயமாகும்.

கொவிட் தடுப்பூசி பெற்றுக் கொண்ட போதும் அதனூடாக முழுவதுமாக வைரஸிடம் இருந்து பாதுகாப்பு கிடைக்காது என அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.