மட்டு கல்லடி வேலூர் பொதுச்சுகாதார பிரிவில் மூவருக்கு கொரோனா(PHOTOS)

0
295

மட்டக்களப்பு கல்லடி வேலூர் பொதுசுகாதார பிரிவில் 135 நபர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட ரபிட் அன்டிஜன் பரிசோதனையில் மூவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொதுச்சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.

தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவுக்குட்பட்ட கல்லடி வேலூர் கிராம சேவையாளர் பிரிவில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களுடன் நேரடியாக தொடர்புபட்டவர்கள், தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டவர்கள் என 135 நபர்களுக்கு ரபிட் அன்டிஜன் பரிசோதனைகள் இன்று முன்னெடுக்கப்பட்டன.

மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக வைத்தியர் கிரிசுதன் தலைமையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை நுண் உயிரியல் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் வைதேகி ரஜீவன் பிரான்சிஸ் மற்றும் வைத்தியசாலை ஆய்வு கூட தொழில் நுட்பவியலாளர்களுடன் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் இணைந்து பரிசோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.