மட்டக்களப்பு – காத்தான்குடி தபாலகத்தில் முதியோர் கொடுப்பனவு மற்றும் விவசாயிகளுக்கான ஓய்வூதியக் கொடுப்பனவு இன்று வழங்கப்பட்டன.

கொவிட்-19 தொற்று நிலைமை காரணமாக பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளமையால் 2021 மே மாதத்திற்குரிய ஓய்வூதியம் விவசாயம், மீனவர் ஓய்வூதியம், முதியோர் கொடுப்பனவு மற்றும் பொதுசன மாதாந்தக் கொடுப்பனவுகளைப் பெற்றுக்கொள்ள முடியாது போனவர்களுக்கு குறித்த கொடுப்பனவுகளை மாத்திரம் பெற்றுக் கொள்ளக்கூடிய வகையில் இன்றும் நாளையும் காலை 09.30 மணி தொடக்கம் பிற்பகல் 02.00 மணி வரை அஞ்சல் அலுவலகங்கள் மற்றும் உப அஞ்சல் அலுவலகங்களை திறக்குமாறு அரசாங்கம் எடுத்த நடவடிக்;கையை அடுத்து தபாலகங்கள் திறக்கப்பட்டு கொடுப்பனவுகள் வழங்கப்பட்டன.

காத்தான்குடி தபாலகத்தில் முதியோர் கொடுப்பனவு மற்றும் விவசாயிகளுக்கான ஓய்வூதியக் கொடுப்பனவு இதன்போது வழங்கப்பட்டன.
சுகாதார நடைமுறைகளை பேணி இக் கொடுப்பனவுகளை உரியவர்கள் பெற்றுச் சென்றனர்.
