மட்டக்களப்பில் கொரோனா சிகிச்சைப் பிரிவு கையளிப்பு

0
351

மட்டக்களப்பு கரடியனாறு பிரதேசத்தில் சிறீலங்கா பொதுஜன பெரமுன கட்சியால் அமைக்கப்பட்ட ஐம்பது கட்டில்களைக்கொண்ட சிகிச்சைப்பிரிவு சுகாதாரத்துறையினரிடம் கையளிக்கப்பட்டது.

பிரதேச செயலாளர் என்.வில்வரெட்ணம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வி;ல் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன், மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன், சிறீலங்கா பொது ஜன பெரமுன கட்சியின் செயற்பாட்டாளர் எஸ்.சந்திரகுமார் மற்றும் சுகாதாரத் திணைக்கள அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.
குறித்த சிகிச்சை நிலையத்தில் 60 கட்டில்கள் இடமுடியும் தெரிவிக்கப்பட்டள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி கரடியனாறு மற்றும் வாகரை ஆகிய வைத்தியசாலைகளில் கொரோனா சிகிச்சைப்பிரிவுகள் இயங்கிவருகின்ற போதிலும் மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துவருவதை கருத்திற்கொண்டு மேலும் சில சிகிச்சைப்பிரிவுகளை அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.