ஹொரணை பிரதேசத்தில் அமைந்துள்ள முன்னணி தொழிற்சாலை ஒன்றின் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, அவரிடம் நெருங்கிப் பழகிய 170 க்கும் அதிகமானோர் இன்று (31) மாலை பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளனர்.
குறித்த தொழிற்சாலையின் 20 ஊழியர்களிடம் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட பிசிஆர் பரிசோதனையின் போது குறித்த நபருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த தொழிற்சாலையில் நூற்றுக்கும் அதிகமானவர்கள் பணிபுரியும் நிலையில் தொழிற்சாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை ஹொரணை பிரதேசத்தில் மேலும் 24 கொவிட் 19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
களுத்துறை மாவட்டத்தில் தற்போதைய நிலையில் 355 கொவிட் தொற்றாளர்கள் இனம் காணப்பட்டுள்ளதாக களுத்துறை பிரதேச சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் வைத்தியர் உதய ரத்நாயக்க தெரிவித்தார்.
அவர்களில் 50 பேர் மத்துகம பிரதேசத்திலிருந்து பதிவாகியுள்ளதாக வைத்தியர் மேலும் தெரிவித்தார்.