மட்டக்களப்பில் தனிமைப்படுத்தலில் இருந்து மூன்று கிராமங்கள் விடுவிப்பு

0
324

மட்டக்களப்பில் தனிமைப்படுத்தலில் இருந்த மூன்று கிராமங்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட ஐந்து கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் கடந்த 18 ஆம் திகதி முதல் மாவட்ட கொவிட் தடுப்பு செயலணியின் தீர்மாணத்திற்கு அமைவாக முழுமையாக முடக்கபட்டிருந்தன.
இந்நிலையில் இன்று முதல் மூன்று கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட கொவிட் தடுப்பு செயலணியின் தலைவருமாகிய கணபதிப்பிள்ளை கருணாகரன் எமது செய்தி பிரிவுக்கு தெரிவித்துள்ளார்.
இதேவேளை தனிமைப்படுத்தலில் இருந்து வந்த பாலமீன்மடு, கல்லடி வேலூர், திருச்செந்தூர் ஆகிய மூன்று கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் இன்று முதல் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் நொச்சிமுனை, சின்ன ஊறணி ஆகிய இரண்டு கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தலில் இருக்குக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.