திருகோணமலை – பாலையூற்றுப் பகுதியில் தனிமைப்படுத்தப்பட்ட கோயிலடி பிரதேசத்தில் உலர் உணவு பொருட்கள் வழங்கும் போது குழப்ப நிலை ஏற்பட்டது.
உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலையூற்று, பூம்புகார் கிராம உத்தியோகத்தர்கள் பிரிவுகள் கடந்த 26ஆம் திகதி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் அரசாங்கத்தால் உலர் உணவுப் பொதிகள் வழங்கும் நிகழ்வு கிராம உத்தியோகத்தர் தலைமையில் இடம் பெற்றுள்ளது.
இதன்போது அங்கு குழப்பநிலை ஏற்பட்டு இரு குழுக்களுக்கு இடையில் முரன்பாடு ஏற்பட்டிருந்தது.
அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினரால் நிலமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.