நுகர்வுக்கு பொருத்தமற்ற மீன்கள் சந்தைக்கு வராது: அரச தரப்பில் உறுதி

0
398

எக்ஸ்பிரஸ் பர்ல் கப்பலினால் பாதிக்கப்புக்குள்ளான கடல் பிரதேசத்தில் உள்ள மீன்களின் உடல்களில் தீங்கு விளைவிக்கும் பொருள்கள் இருப்பது இதுவரையிலும் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் உறுதிப்படுத்தப்படவில்லை என்று கடற்றொழில் மற்றும் நீரியல் வள திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், குறித்த கடல் பிரதேசத்தில் மீன்ப்பிடி நடவடிக்கைகள் தடை செய்யப்பட்டுள்ளதாகவும் நுகர்வுக்கு பொருத்தமற்ற மீன்கள் சந்தைக்கு வராது என்றும் அவர் கூறினார்.

மேலும், பயண கட்டுப்பாடு விதித்திருந்தாலும் நடமாடும் வாகன வியாபாரிகளினால் மீன் விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, இலங்கையின் மீன்வளம் மற்றும் கடற்கரை உட்பட கடல் பகுதியின் நீண்டகால விளைவுகள் குறித்து மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும் கடல்சார் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.