பயணக்கட்டுபாட்டின் போது வீடுகளில்  வீட்டுத்தோட்ட செயற்பாடுகளை முன்னெடுங்கள்! யாழ் அரச அதிபர்.

0
592

பயணக்கட்டுபாடுகளுடன் வீடுகளுக்குள் பாதுகாப்பாக இருக்கும் போது யாழ் மாவட்ட மக்கள் தங்கள் வீடுகளில் சாத்தியமான இடங்களில் சாத்தியமான இயற்கை முறைகளில்  வீட்டுத்தோட்டசெயற்பாடுகளைமுன்னெடுத்து நச்சுத் தன்மையற்ற இயற்கையான சூழலை உருவாக்குவோம் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர்க.மகேசன் தெரிவித்தார் .

உலக சுற்றாடல் தினம் தொடர்பில் கருத்துரைக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கொரோனாபரவல் மிகவும் ஆபத்தானநிலையில் பரவிவரும் இவ்வேளைமக்கள் பயணக்கட்டுபாடுகளுடன் வீடுகளுக்குள் பாதுகாப்பாக இருக்கும் இவ் வேளையில் இவ் வருடத்திற்கானசுற்றாடல் தினத்தை யூன் -5 நினைவு கூர்ந்துமக்களைவிழிப்பூட்டவேண்டியவர்களாக இருக்கின்றோம்.

உலகசுற்றாடல் தினம் சுற்றுச் சூழலியரீதியில் மிகவும் முக்கியமான நாளாகும். எல்லோரும் சுற்றுச் சூழல் பிரச்சினைதொடர்பில் கவனம் செலுத்தவேண்டும் எனும் நோக்கில் 1974 லிருந்துகொண்டாடபட்டுவரும் நாளாக சூழல் தினம் காணப்படுகின்றது.  

உலகசுற்றாடல் தினம் யூன் 5இ 2021 ற்கானபிரதானகருப் பொருளாக சூழல்தொகுதியை மீளநிலைநிறுத்துதல் என்பதாகும். அதாவதுமனிதநடவடிக்கைகளால் தரமிழந்துசென்ற சூழல்தொகுதியை மீளஉருவாக்குதல் அல்லதுமீளநிலைநிறுத்துதலைகுறித்துநிற்கின்றது.

இவ் வருடத்தின் ஏப்பிரல் மாதம் 22 திகதிகொண்டாடப்பட்ட புவிதினத்தின் கருப்பொருளாகநாம் வாழும் பூமியைமீளநிலைநிறுத்துவோம் என்பதாகும். அதேபோன்றுமேமாதம் 22 ஆம் திகதிகொண்டாடப்பட்டஉலக உயிர் பல்வகைமை தினத்தின் கருப்பொருளாக சூழல் பிரச்சினைகளைதீர்ப்பதற்குரியஒருபகுதியாகநாங்கள் இருக்கின்றோம் என்பதாகும்.

கட்டுப்பாடற்றமனிதநடவடிக்கைகளால் மனிதசுகாதாரம் காலநிலைஉணவு,நீர்பாதுகாப்பு,நீடித்துநிலைக்கும் வாழ்வாதாரம் என்பனகேள்விக்குறியாகியுள்ளநிலையில்  இவ் வருடத்திற்கான சூழல் தினங்கள் அனைத்தும் கூட்டாகவலியுறுத்துவது யாதெனில் நாம் வாழும் சூழல்தொகுதியை மீளஉருவாக்குவதுமற்றும் மீளநிலைநிறுத்துவதாகும் என தெரிவித்த அரச அதிபர் மேலும் தெரிவிக்கையில்.

ஐக்கியநாடுகள் சபையினாது  2021- 2030 வரையானகாலப்பகுதியை சூழல்தொகுதியை மீளநிலைநிறுத்துவதற்கானதசாப்பதமாகபிரகடனப்படுத்தியுள்ளது. இந்நிலையில் எமதுமாவட்டத்தைபொறுத்தவரையில் துரிதநகரமயமாக்கல் செயற்பாடுகாரணமாகஆரோக்கியமாக வாழ்ந்தவீட்டுச் சுற்றாடலை இழந்துள்ளோம்.

1980 களிற்குமுன்னர் பாரம்பரிய விவசாயஉற்பத்திவீட்டைச் சுற்றிபயன்தருமரங்கள் பசுமாடுகள் கடினஉழைப்புஉறவுவலைப்பின்னல் போன்றபண்புகளுடன் இருந்தயாழ்ப்பாணமக்கள் இன்று இவற்றைத் தொலைத்தவர்களாகஇருக்கிறார்கள்.

விவசாயநடவடிக்கையில் பயன்படுத்தப்படும் கட்டுப்பாடற்ற இரசாயனப் பசளைகிருமிநாசனிப் பயன்பாடுநிலத்தடிநீரைமாசாக்கம் செய்வதுடன் அதிகளவில் புற்றுநோயாளக்களையும் சிறுநீரகநோயாளர்களையும் உருவாக்கியுள்ளது.

முன்னர் எமதுமாவட்டத்தில் புற்றுநோயாளர்கள்விரல்விட்டுஎண்ணுமளவிற்கு இருந்ததுஆனால் தற்போது இலங்கையில் அதிகளவில் அடையாளப்படுத்தப்படும்  பகுதியாகவடமாகாணம் அமைந்துள்ளது. இயற்கைச் சூழலுக்கு விரோதமாகஇரசாயனப் பசளைகிருமிநாசனிப் பயன்பாட்டிற்குட்பட்டவிவசாயஉற்பத்திகள் இறக்குமதிசெய்யப்பட்டஉணவு வகைகள்,  மரபணு மூலம் உருவாக்கப்பட்ட இனங்கள் மூலமானஉற்பத்திகள் மற்றும் சொகுசானவாழ்க்கைமுறைகள் எம்மில் இன்றுபலரைநோயாளர்களாகமாற்றியுள்ளன.
எனவே கொரோனாபரவல் மிகவும் ஆபத்தானநிலையில் பரவிவரும் இவ்வேளைமக்கள் பயணக்கட்டுபாடுகளுடன் வீடுகளுக்குள் பாதுகாப்பாக இருக்கும் போது மக்கள் தங்கள் வீடுகளில் சாத்தியமான இடங்களில் சாத்தியமானமுறைகளில்  வீட்டுத்தோட்டசெயற்பாடுகளைமுன்னெடுத்து நச்சுத்தன்மையற்றமரக்கறிகளைஉற்பத்திசெய்யவேண்டும்.

பயன்தருமரங்களைஉருவாக்கிஅரோக்கியமானசூழலை உருவாக்கவேண்டும். எமதுமாவட்டவிவசாயிகள் சேதனமுறையிலானபாரம்பரியவிவசாயமுறைகளைபின்பற்றக்கூடியவகையில் தங்களைமாற்றிக்கொள்ளவேண்டும். விவசாயதிணைக்களங்கள்;  விவசாயஉத்தியோகத்தர்கள் உர சீராக்கலுக்கானஉத்தியோகத்தர்கள் சேதனமுறையிலானவிவசாயம் நோக்கிசெல்வதற்கேற்றவகையில் இணைந்துஅர்ப்பணிப்புடன் செயற்படவேண்டும்.

கிராமியமட்டங்களில்  கிராமியமட்டநிர்வாகம் மரம் நடுகைமற்றும் சுகாதாரபாதுகாப்புசெயற்பாடுகளைதுரிதப்படுத்தும் வகையில் கிராமியமட்டஅமைப்புக்களுடன் இணைந்துவிரைந்துசெயற்படவேண்டும்மேலும் பாடசாலைகள் மாணவர்களுக்குநடத்தைசார்ந்து சூழல் விழிப்புணர்வைகொண்டுவரவேண்டும்
இவ்வாறுஎல்வோரும் இணைந்துசெயற்படுவதன் மூலம் எமதுகிராமிய சூழல் தொகுதியைமீளநிலைநிறுத்திஇகொடியநோய்ப்பரவலிலிருந்துமக்களைநிலையாகவிடுவித்துநீடித்துநிலைக்கும் வகையில் எமதுசமூகத்தைஆரோக்கியமாககட்டியெழுப்புவோம் என இந்நாளில் உறுதிகொள்வோம் என்றார்.