மட்டக்களப்பு, வெல்லாவெளி சுகாதார திணைக்களப்பிரிவுக்குட்பட்ட திருப்பழுகாமம் பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைபெறவந்த இருவருக்கு கொரனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாக பொதுச்சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.
இன்று காலை பெரியபோரதீவிலிருந்து சுகவீனம் காரணமாக சிகிச்சைபெற வந்தவர்களுக்கே கொரனா தொற்றுக்குள்ளாகியுள்ளது கண்டறியப்பட்டதாக பொதுச்சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து வைத்தியசாலையில் தொற்றுநீக்கும் செயற்பாடுகள் இன்று முன்னெடுக்கப்பட்டன.
போரதீவுப்பற்று பிரதேசசபையும் வெல்லாவெளி சுகாதார திணைக்களமும் இணைந்து இந்த தொற்று நீக்கும் செயற்பாடுகளை முன்னெடுத்தது.