ஏறாவூரில் கொரோனா தடுப்பூசி ஏற்றல்

0
303

ஏறாவூர் பிரதேச சுகாதார வைத்தியதிகாரி பிரிவில் சுமார் இரண்டாயிரம் பேருக்கு ‘சினோபாம்’ கொரோனா தடுப்புசி செலுத்தும் பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டன.

அடுத்த மூன்று நாட்களுக்கு செயற்படுத்தப்படும் இத்திட்டத்தின்கீழ் முதற்கட்டமாக பொலிஸ் உத்தியோகத்தர்கள் , பிரதேச செயலகம் மற்றும் நகர சபை ஊழியர்களுக்கும் முதற் கட்டமாக தடுப்பூசிகள் ஏற்றப்படவுள்ளன.

ட்டக்களப்பு பிராந்திய தொற்றுநோயியலாளர் குணராஜா ஜயசேகரன் , பிரதேச சுகாதார வைத்தியாதிகாரி சாபிறா வசீம், பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி கீர்த்தி ஜயந்த ஆகியோரின் கண்காணிப்பில் இப்பணிகள் நடைபெற்றன.

09.06.2021 மிச்நகர் மற்றும் ஏறாவூர்-3 பிரிவு ஆகிய பிரதேசங்களிலுள்ள 60 வயதிற்கு மேற்பட்டோருக்கும் 10.06.2021 மீராகேணி மற்றும் ஏறாவூர்- 3 பிரிவு ஆகிய பிரதேசங்களில் வசிக்கும் வயோதிபர்களுக்கும் 11.06.2021 ஏறாவூர்- 2பி பிரதேசத்து வயோதிபர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது.